கோடம்பாக்கம் Corner

இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு, சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடிக்கும் மும்மொழிப் படம், ‘அந்நியன்’ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களை இயக்க ஆயத்தமான இயக்குநர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

இதற்கிடையில் அந்நியன் படத்தின் கதை உரிமையை எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து நான் வாங்கியிருக்கிறேன். எல்லா மொழிகளுக்கும் சேர்த்தே 3.5 கோடி ரூபாய் அந்நியன் படத்துக்கு சம்பளமாகக் கொடுத்தேன் என்று கூறி அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வழக்குத் தொடுத்துள்ளார்.

இவை ஒரு பக்கம் இருக்க.. எந்திரன் படத்தின் கதையைத் திருடிவிட்டதாக ஷங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு நீண்டகாலமாக நடந்து வருகிறது. இத்தனை வழக்குகள் ஷங்கர் மீது இருந்தும் அவர் எதையும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. தற்போது லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் பதில் அளித்து நீதி மன்றத்தில் அந்த வழக்கிலிருந்து தன்னை விலக்கிவிடும்படி கோரியுள்ளார்.

அவர் தன்னுடைய பதில் மனுவில் கூறியிருப்பதாவது: ‘இந்தியன் 2 படத்தின் தாமதத்துக்கு படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனமே காரணம், கமலுக்கு ஸ்பெஷல் மேக் அப் போட்டதில் அலர்ஜி ஏற்பட்டது, படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, கொரோனா ஊரடங்கு போன்றவையும் இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாக காரணங்களாகும். பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு நான் பொறுப்பல்ல. எனவே லைகா நிறுவனத்தின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

படத்தின் பட்ஜெட்டை ரூ 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமதத்தை லைகா ஏற்படுத்தியது. அரங்குகள் அமைப்பது, நிதி ஒதுக்குவதில் லைகா தாமதமப்படுத்தியது’ என்று ஷங்கர் குறிப்பிட்டுள்ளார். இந்தியன் 2 திரைப்படத்தை முடிக்காமல், வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரிய லைகா நிறுவனத்தின் இந்த வழக்கில், இந்திய முதலீட்டாளர் என்ற வகையில் லைகாவின் தரப்புக்கே நீதிமன்றம் அதிகம் சலுகை வழங்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கு வரும் ஜூன் 4-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.