கோடம்பாக்கம் Corner

ஆண்டுக்கு ஒரு படம் நடித்தாலும் அது மற்ற முன்னணி நடிகர்களின் வசூலை எல்லாம் ஒன்றுமில்லை என ஆக்கி வந்தது தல அஜித்தின் நட்சத்திர சாம்ராஜ்யம் !

இதுவரை இல்லாத வகையில் அஜித்துக்கு வலிமை அமைந்துவிடும் என்று தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச். வினோத் உட்பட பலரும் வலிமை குறித்து கடந்த 2019-ல் குறிப்பிட்டனர். ஆனால் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கொரோனா முதல் அலையின் போதும் தற்போது இரண்டாம் அலையிலும் தொற்று அச்சம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு விட்டது.

முதல் அலை முடிந்துவிட்டது என அனைவரும் இருமாந்து இருந்த நேரத்தில்தான் வலிமை குறித்து நீண்ட நாட்களாக எந்தவித அப்டேட்டும் வராத காரணத்தால் அஜித் ரசிகர்கள் பிரபலங்கள் பலரிடமும் 'வலிமை' அப்டேட் கேட்டு வந்தனர். டிக்டாக் மூலம் பிரபலமான நெல்லை மாவட்ட நகைச்சுவை கலைஞர் ஜி.பி. முத்து, தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, சென்னை மைதானத்தில் வைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, சென்னை வந்த பிரதமர் மோடி என பலரிடமும் தல ரசிகர்கள் வலிமை அப்பேட் கேட்ட காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. இதனைத் தொடர்ந்து அஜித், ‘எனது ரசிகர்கள் பிரபலங்கள் யாரையும் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது’என கோரிக்கை விடுத்தார்.

இதனால் பொறுமை காத்த ரசிகர்கள் கோரானா காலத்தையும் விட்டு வைக்காமல் ‘ நான் ஜெயித்தால் வலிமை அப்டேட் பெற்றுக்கொடுப்பேன்’ என்று ஓட்டுக்காக ட்வீட்டரில் பதிவிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் அவர் தற்போது ஜெயித்துவிட்டால் ‘ வலிமை அப்டேட் பெற்றுத்தர வாக்குறுதி தந்ததை நினைவூட்டுகிறோம்’ என்று அவரை டேக் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.

வலிமை அப்டேட்டுக்கு இவ்வளவு வெறித்தனமாக இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு தற்போது மேலும் ஒரு சோதனையான செய்தி வந்துள்ளது. 'வலிமை' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை ஐரோப்பாவில் எடுக்க இயக்குனர் வினோத் திட்டமிட்டிருந்தார். இதற்காக படக்குழுவினர் ஐரோப்பா செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு மற்ற நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பாவிலும் அடுத்துவரும் 6 மாதங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று பெரும்பாலான நாடுகள் அறிவித்திருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் படக்குழுவினர் திகைத்துள்ளனர்.

இதனால் வரும் ஆகஸ்ட் மாதம் வலிமை திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2021 ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று படத்தை வெளியிடலாம் என முடிவு செய்து தமிழ் நாட்டில் மட்டும் 650 திரையரங்குகள் ஆகஸ்ட் 15 தேதி முதல் முன்பதிவு செய்து வைத்திருந்தார் தயாரிப்பாளர் போனி கபூர். தற்போது திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது கேள்விக்குறியாகி இருப்பதால் திரையரங்கு முன்பதிவை ரத்து செய்துவிடுமாறு அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பட்டுள்ளது. இதனால் வலிமை இந்த ஆண்டு வெளியாக வாய்ப்பில்லை என்கிற தகவல் வெளியாகி தல ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.