முற்றம்

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க வன்னியர் சமூக மக்களுக்கு தமிழக அரசுப்பணிகள், உயர்கல்வி ஆகியவற்றில் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிய, கடந்த அதிமுக அரசு அறிவித்தது.

இதனால் மற்ற இரு பிறபடுத்தப்பட்ட பிரதான தமிழ்ச் சமூகங்களான முக்குலத்தோர், நாடர்களின் வாக்குகளை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெறமுடியாமல் வாக்குகளை இழந்தது. மேலும் மறைந்த கலைஞர் மு.கருணாநிதி முதல்வாராக இருந்தபோது, மத்தியில் வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் தமிழகத்தின் கொண்டுவரப்பட்ட பிற்படுத்தபட்ட சமூகங்களுக்கான 67 இட ஒதுக்கீட்டை காப்போம் எனவும் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடிவரும் ஏழுபேர் விடுதலையைச் சாத்தியமாக்குவோம் என்றும் திமுக தன்னுடையை தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

தற்போது திமுக தேர்தலில் வென்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில் 67 விழுக்காடு இட ஒதுக்கீடு மற்றும் ஏழு பேர் விடுதலை குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, ‘கடந்த 1992 ஆம் ஆண்டு, இந்திரா சகானி என்பவர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ”கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களை மைய நீரோட்டத்திற்கு கொண்டு வருவதற்கான சில விதிவிலக்கான மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே 50 சதவீத விதியை தளர்த்த முடியும்’ என்று உத்தரவிட்டது குறித்தும், ஆனால், தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா உட்பட சில மாநிலங்கள், 60 சதவீதத்திற்கும் மேல் இடஒதுக்கீடு வழங்கும் சட்டங்களை இந்திரா சகானி வழக்கின் தீர்ப்புக்கு முன்னரே நிறைவேற்றியிருக்கின்றன என்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டது விவாதிகப்பட்டுள்ளது.

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில், மராட்டியர்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் மராத்தா இடஒதுக்கீடுச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், மாநில அரசுகள் வழங்கும் இடஒதுக்கீடு 50 சதவீதத்தை மீறக் கூடாது என்கிற இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதுபற்றியும் சட்ட அமைச்சருடனான கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் விவாதித்துள்ளார்.

ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்ட அமைச்சர் ரகுபதி, “இந்திரா சகானி வழக்கு தீர்ப்பின் அடிப்படையில்தான் மராட்டிய இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்திரா சகானி வழக்குக்குப் பிறகுதான், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்துக்கு, அரசியலமைப்பு சட்டத்தில் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

தற்போது மராட்டிய இட ஒதுக்கீடு வழக்கில் வழங்கப்பட்ட 500 பக்க தீர்ப்பை படித்து அரசு தலைமை வழக்கறிஞர் முதல்வரிடம் உரிய முடிவை தெரிவிப்பார் என்று குறிப்பிட்ட அவர், “தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதுதான் முதல்வரின் நோக்கம். இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டு, அது நிலைநிறுத்தப்படும்.” என்று கூறியுள்ளார். மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையே எங்கள் குறிக்கோள் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது போல, ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் நல்ல முடிவெடுப்பார். விரைவில் அறிவிப்பு வரும்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார்.

-4தமிழ்மீடியாவுக்காக:மாதுமை

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2வது அலை தோன்றிய போது, மிக மோசமான பாதிப்புக்களைச் சந்திங்கத் தொடங்கின. தினசரி தொற்று வீதத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அண்டைய நாடுகள் சில சுவிற்சர்லாந்தை ஆபத்து நாடுகளின் பட்டியலில் சேர்த்தும் கொண்டன.

தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.