தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈய்ந்த மாவீரர்களையும், பொதுமக்களையும் நினைவுகூரும் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் பொதுமக்கள் தமது உள்ளக் குமுறல்களை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி வந்து கொட்டித் தீர்த்தனர். அஞ்சலி செலுத்தி அழுது புரண்டனர்.
எமதுபார்வை
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது தமிழ் மக்களின் தார்மீக உரிமை!
வடக்கு கிழக்கில் மாவீரர் வாரத்தினை முன்னிட்டு பாதுகாப்புத் தரப்பினரின் கெடுபிடிகள் அதிகரித்திருக்கின்றன. கடந்த 22ஆம் திகதி நள்ளிரவு யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த பொலிஸார், “மாணவர்களை சுட்டுக் கொல்வோம்” என்று அச்சுறுத்திச் சென்றிருக்கின்றனர். சக மாணவன் ஒருவரின் பிறந்தநாளுக்காக கேக் வெட்டிக் கொண்டாடியதையே பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்கிற ரீதியில் பொலிஸார் அணுகியிருக்கின்றார்கள்.
ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் படுகொலைகளுக்கு நீதி வழங்குதல் அடிப்படை அறமாகும்!
“இலங்கையில் தமிழர் தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான எமது மக்களிற்கு எவ்வாறு நீதி கிடைக்கவில்லையோ, அதே போன்று படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜன் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களிற்கும் இது வரை நீதி கிடைக்கவில்லை.” என்று வடக்கு- கிழக்கு ஊடக அமைப்புக்கள் சார்பில், யாழ். ஊடக அமையத்தினால் கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
'எழுக தமிழ்' வெற்றி சொல்லும் செய்திகள்!
‘எழுக தமிழ்’ எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் மீறிய மக்கள் பங்களிப்போடு தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்திருக்கின்றது. முதல் வெற்றி என்பதன் பொருள், “கடந்த ஏழு ஆண்டுகளில் பேரணி அல்லது போராட்டமொன்றுக்காக அதிகளவான தமிழ் மக்கள் ஓரிடத்தில் ஒன்றித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.”
டொனால்ட் ட்ரம்பின் வெற்றியும் ராஜபக்ஷக்களின் அங்கலாய்ப்பும்!
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி 45வது அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்பார். பராக் ஒபாமா என்கிற அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் பதவி வகித்த பின்னர், இனவாத அடிப்படை வாதத்தினை முன்மொழிந்து வந்து டொனால்ட் ட்ரம்ப் அந்தப் பதவிக்கு வருகின்றார்.
புதிய அரசியலமைப்பு எனும் பெயரில் ரணில் ஆடும் சித்து விளையாட்டு!
புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் இணங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்த் தேசிய அரசியலின் மீள் எழுச்சிக்கு ‘எழுக தமிழ்’ பங்களிக்கலாம்!
தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணி நாளை மறுதினம் சனிக்கிழமை (செப்டம்பர் 24, 2016) யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. 1. தமிழர் தாயகத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும், 2. தமிழர் தேசம், தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியும், 3. போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியுமே இந்தக் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
More Articles ...
சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2வது அலை தோன்றிய போது, மிக மோசமான பாதிப்புக்களைச் சந்திங்கத் தொடங்கின. தினசரி தொற்று வீதத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அண்டைய நாடுகள் சில சுவிற்சர்லாந்தை ஆபத்து நாடுகளின் பட்டியலில் சேர்த்தும் கொண்டன.
தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.
மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.