எமதுபார்வை

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

ஜூலை 4 -

மாலியில் கிராமங்களுக்குள் புகுந்து இனவாத பழங்குடியினர் தாக்குதல்! : 40 பேர் வரை பலி

ஜுலை 5 -

தென்சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் போர்ப் பயிற்சி! : சீனாவுக்கு அதிகரிக்கும் அழுத்தம்

ஜுலை 6 -

கொரோனாவுக்கு மத்தியில் குரொஷியாவில் நாடாளுமன்றத் தேர்தல்!

ஜுலை 9 -

அமெரிக்க அரசின் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா முடக்கம் : இந்திய மாணவர்கள் பாதிப்பு

ஜுலை 11 -

இந்தி திரையுலகப் பிரபலம் அமிதாப் பச்சனுக்கு கோவிட்-19 : ரசிகர்கள் அதிர்ச்சி

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி மொத்தமுள்ள 93 ஆசனங்களில், 83 ஐக் கைப்பற்றி பெரும்பான்மை வெற்றி பெற்றதன் மூலம் ஆட்சி அமைத்தது

கொரோனா அச்சத்தால் 8000 மேலதிக கைதிகளை விடுவித்தது கலிபோர்னியா!

ஜூலை 12 -

சீனாவில் கனமழையால் யாங்சி நதியில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 140 பேர் பலி!

ஜூலை 16 -

பிட்காயின் மோசடி: ஹேக்கிங் செய்யப்பட்ட அமெரிக்காவின் முக்கிய ட்விட்டர் கணக்குகளில் ஜெப் பெசோஸ் மற்றும் பில்கேட்ஸ் போன்றவர்களின் கணக்கும்..

ஜூலை 17 -

1790ம் ஆண்டுக்குப் பின் 200 ஆண்டுகளில் கோடைகாலத்தில் ஏற்பட்ட மிகப் பெரும் வெள்ளமாக பிராந்திய இத்தாலியின் சிசிலித் தீவில் ஏற்பட்ட வெள்ளம்

கொரோனா தடுப்பு மருந்து தகவல்களைத் திருட முயல்வதாக தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் ரஷ்யா!

ஜூலை 19 -

பாகிஸ்தானில் உடைத்தெறியப் பட்ட இன்னொரு பிரம்மாண்ட புத்தர் சிலை!

ஜூலை 23 -

செவ்வாய் கிரக ஆய்விற்கு தன் முதல் ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பிய சீனா

ஜுலை 27 -

சீனாவுக்கு அதிமுக்கியத்துவம் மிக்க இராணுவ உதவியை வழங்க மறுத்தது ரஷ்யா!

ஆகஸ்ட் 2 -

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாசா வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் ஓடம் மூலம் வெற்றிகரமாகப் பூமி திரும்பினர்!

ஆகஸ்ட் 5 -

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்தில் 73பேர் பலி

ஆகஸ்ட் 8 -

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசிவால் சுற்றுச்சூழல் அழிவின் நெருக்கடி நிலையில் மொரீஷியஸ் தீவு

ஆகஸ்ட் 10 -

பெய்ரூட் நைட்ரேட் வெடி விபத்தில் இறப்பு எண்ணிக்கை 200 ஆக உயர்வு, லெபனான் புரட்சியில் பிரதமர் உட்பட அமைச்சரவை ராஜினாமா!

ஆகஸ்ட் 11 -

இந்தோனேசியாவின் சினாபங்க் எரிமலை வெடித்து சீற்றம்! : பொது மக்கள் வெளியேற்றம்

ஆகஸ்ட் 16 -

மிக அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடிய பூமாரங் வகை நிலநடுக்கம் கண்டுபிடிப்பு!

ஆகஸ்ட் 18 -

ரஷ்ய தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் V இன் ஆராய்ச்சித் தகவல்களைக் கோரிய இந்தியா !

ஆகஸ்ட் 20 -

மாலியில் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம்! : அதிபர் பதவி விலகல் : நாடாளுமன்றம் கலைப்பு!

ஆகஸ்ட் 23 -

உலகின் மிகவும் வயதான மனிதர் : 116 வயதில் தென்னாப்பிரிக்காவில் காலமானார்

ஆகஸ்ட் 27 -

கொரோனாவால் மோசமாக முடங்கியிருந்த சீனாவின் வுஹானில் 8 மாதங்களுக்குப் பின் கல்லூரிகள் திறப்பு

செப்டம்பர் 1 -

இந்துக்களின் புனிதத் தலம் மானசரோவரில் சீனா ஏவுகணைத் தளம்!

செப்டம்பர் 5 -

தங்கள் வான் வழியாக UAE செல்ல இஸ்ரேல் விமானங்களுக்கு பஹ்ரைன் அனுமதி!

உலகின் மிக நீளமான சுவிஸ் -ஆல்ப்ஸ் சுரங்கப் பாதையின் மூன்றாம் கட்டம் திறக்கப்பட்டது !

செப்டம்பர் 7 -

ஸ்புட்னிக் 5 என்று பெயரிடப் பட்ட கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா இதன் அனைத்துக் கட்ட முக்கிய சோதனைகளும் நிறைவுற்ற நிலையில், இந்த வாரம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு உலகின் முதல் நாடாக அறிமுகப் படுத்துகின்றது

மறு பயன்பாட்டுக்குரிய சீன விண்கலம் வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியது!

செப்டம்பர் 13 -

ஆப்கான் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடக்கம்

செப்டம்பர் 14 -

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வானார்!

செப்டம்பர் 15 -

எத்தியோப்பியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை : 500,000 பேர் பாதிப்பு

செப்டம்பர் 20 -

ஈரான் மீதான பொருளாதாரத் தடைக்கு அமெரிக்காவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஐ.நா உறுப்பு நாடுகள்!

செப்டம்பர் 22 -

2100 ஆமாண்டுக்குள் சமுத்திரங்களின் நீர் மட்டம் 38 செண்டி மீட்டர் உயரும் அபாயம்!

செப்டம்பர் 25 -

இந்திய பிரபல பின்னணி இசைப் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி உடல் உறுப்புக்கள் செயல் இழந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இயற்கை எய்தினார்.

செப்டம்பர் 27 -

சுவிற்சர்லாந்தில் மிதமான குடியேற்றத்திற்கான முன்முயற்சியை வாக்களிப்பில் மக்கள் நிராகரித்தார்கள்..

ஆக்டோபர் 1 -

கோவிட்-19 உயிரிழப்புக்கள் 10 இலட்சத்தைத் தாண்டியது வேதனையானது! : ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டரஸ்

ஆக்டோபர் 3 -

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஆக்டோபர் 4 -

அஜர்பைஜான் மற்றும் ஆர்மினியா இடையே மோதல்கள் தீவிரம்! : 3000 துருப்புக்கள் பலி

பிரான்ஸுடன் இணைந்து இருக்க விருப்பம்! : புதிய கலெடோனியா வாக்களிப்பில் மக்கள்!

ஆக்டோபர் 17 -

ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான புட்டினின் கருத்தை நிராகரித்த வெள்ளை மாளிகை!

ஆக்டோபர் 18 -

நியூசிலாந்து தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஜெசிந்தா மீண்டும் பிரதமராகிறார்!

ஆக்டோபர் 26 -

ஐரோப்பாவில் மிக மோசமான வைரஸ் தொற்றுவீதம் உள்ள நாடாக சுவிற்சர்லாந்து, சுவிஸில் நாடளாவிய பூட்டுதல் தவிர்க்க முடியாதது, முடிந்த போதெல்லாம் வீட்டில் இருங்கள் என மருத்துவ நிபுணர்கள் அறிவிப்பு

நவம்பர் 1 -

துருக்கியின் இஸ்மிர் நகரைத் தாக்கிய 7 ரிக்டர் நிலநடுக்கத்தில் 39 பேர் பலியானதுடன் 885 பேர் காயமடைந்தனர். பலத்த சேதம் ஏற்பட்டது.

நவம்பர் 3 -

வியன்னா தூப்பாக்கிச்சூடு சம்பவம் 'வெளிப்படையான பயங்கரவாத தாக்குதல்': உள்துறை அமைச்சர்

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தல்..

நவம்பர் 7 -

சுவிட்சர்லாந்து மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பின.. நாடளாவிய லாக்டவுனுக்கு சுகாதாரத் துறை வலியுறுத்து..

நவம்பர் 8 -

290 எலெக்டோரல் வாக்குகளால் ஜோ பைடென் வெற்றி, அமெரிக்காவின் 46 ஆவது அதிபராகின்றார்! அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மை வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடென் வெற்றியுரை.. தேர்தல் வாக்குப் பதிவு, எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக அதிபர் டிரம்ப் நீதிமன்றம் நாடல்..

நவம்பர் 23 -

பைடெனின் வெற்றியை அங்கீகரிக்க முடியாது என புடினும், பலவீனமான அதிபர் என சீனாவும் கருத்து!

பிரெஞ்சு முன்னால் அதிபர் சர்கோஸி மீது ஊழல் குற்றச்சாட்டு!

நவம்பர் 24 -

நிலவில் இருந்து பாறைகளை எடுத்து வர செய்மதியை விண்ணில் ஏவியது சீனா!

நவம்பர் 25 -

உலகின் கால்பந்து ஜாம்பவானும் முன்னால் ஆர்ஜெண்டினா தலைமை காற்பந்து வீரரும், உலகப் புகழ் பெற்ற காற்பந்து ஐகோனுமான டியேகோ மரடோனா தனது 60 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

டிசம்பர் 3 -

ஈரான் அணுவிஞ்ஞானி படுகொலைக்குப் பின் இஸ்ரேல்? : மத்திய கிழக்கில் பதற்றம்!

டிசம்பர் 8 -

உலகில் முதலாவது கோவிட் - 19 வைரஸ் (Pfizer) தடுப்பூசியின் முதல் துளி பிரிட்டன் மூதாட்டிக்கு கொடுக்கப்பட்டது!

டிசம்பர் 10 -

சுவிற்சர்லாந்தின் 2021 ம் ஆண்டின் கூட்டாட்சித் தலைவராக கை பார்மெலின் தெரிவாகினார் !

டிசம்பர் 12 -

ஆப்கானில் பெண் பத்திரிகையாளர் படுகொலை! : 90 தலிபான்கள் சுட்டுக் கொலை!

டிசம்பர் 14 -

அமெரிக்காவில் பொது மக்களுக்கு பைசர் தடுப்பு மருந்து செலுத்துதல் தொடக்கம்!

நைஜீரியாவை அதிர வைத்த திடீர்த் தாக்குதல்! : 300 பள்ளி மாணவர்கள் இன்னும் மாயம்!

டிசம்பர் 18 -

சுவிற்சர்லாந்தில் கிறிஸ்மஸ் காலத்தில் 'லாக் டவுன்' இல்லை !

டிசம்பர் 19 -

இரண்டாவது கொரோனா தடுப்பூசியாக 'மார்டனாவை' அங்கீகரித்த அமெரிக்கா

டிசம்பர் 20 -

சுவிற்சர்லாந்தில் ஃபைசர்-பயோ என்டெக் கோவிட் - 19 தடுப்பூசி அங்கீகரிக்கப்பெற்றது.

அமெரிக்காவை ஸ்தம்பிக்க வைத்த ஹேக்கிங் இன் பின்னணியில் சீனா! : முரண்படும் டிரம்ப்

டிசம்பர் 21 -

இங்கிலாந்தில் கோவிட் வைரஸின் புதுவகை எச்சரிப்பு - விமானப் போக்குவரத்துக்களுக்கு உடனடித் தடை விதிக்கும் ஐரோப்பிய நாடுகள்

டிசம்பர் 24 -

எத்தியோப்பியாவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு வன்முறை! : 100 பேருக்கும் அதிகமானோர் பலி

உலகை அச்சுறுத்தும் கொரோனா திரிபு! : பிரிட்டனில் 1 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்துகை!

டிசம்பர் 25 -

நிராகரிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் கடவுளின் குழந்தை : கிறிஸ்மஸ் ஈவ் ஆராதனையில் புனித பாப்பரசர்

சுவிற்சர்லாந்திலும் கோவிட் - 19 புதிய வைரஸ் மாறுபாடு நேர்மறை தொற்றுக்கள் கண்டறியப்பட்டன!

உலகளாவிய கோவிட்-19 தொற்றுக்கள் 8 கோடியைக் கடந்தது!

டிசம்பர் 26 -

புதிய வகை கோவிட்-19 வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் தீவிர பரவல்!

டிசம்பர் 28 -

ஐரோப்பிய யூனியனில் கோவிட்-19 இற்கு எதிரான தடுப்பு மருந்து செலுத்தும் பணி ஆரம்பம்!

கோவிட் 19 நிவாரண மசோதாவிலும், சர்ச்சைக்குரிய திபேத் மசோதாவிலும் டிரம்ப் கைச்சாத்து!

டிசம்பர் 31 -

இங்கிலாந்தில் 4 அடுக்கு ஊரடங்கு! : இந்தியாவுக்கும் பரவிய புதிய வகை கொரோனா!

அதிகளவு வாக்குகளால் பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

நிறைவு..

4தமிழ்மீடியா வாசக உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2வது அலை தோன்றிய போது, மிக மோசமான பாதிப்புக்களைச் சந்திங்கத் தொடங்கின. தினசரி தொற்று வீதத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அண்டைய நாடுகள் சில சுவிற்சர்லாந்தை ஆபத்து நாடுகளின் பட்டியலில் சேர்த்தும் கொண்டன.

தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.