எமதுபார்வை

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

மனித வரலாற்றில் மறக்க முடியாத தடங்களைப் பதித்து விட்டு 2020 ஆமாண்டு எம்மை விட்டு நீங்குகின்றது. உலகளாவிய கொரோனா பெரும் தொற்று நோய் முதற் கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 2 ஆவது முறை அதிபர் பதவிக்கான தேர்தல் தோல்வி வரை..

இந்தியாவின் பிரபல பிண்ணணி இசை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முதல் காற்பந்து ஜாம்பவான் மரடோனாவின் இறப்பு வரை.. எனப் பல அழியாத தடங்களை இந்த 2020 ஆமாண்டு எம்மில் பதிந்து விட்டுச் சென்றுள்ளது. இந்நிலையில் எமது 4தமிழ்மீடியா தளத்தில் இந்த 2020 ஆமாண்டில் நிகழ்ந்த உலக நடப்புக்கள் குறித்த உலகச் செய்திகளில் முக்கியமானவை குறித்த சிறு தொகுப்பை இரு பாகங்களாக வெளியிடுகின்றோம்..


31 டிசம்பர் 2019 -

உலகின் முதல் கொரோனா தொற்று தோன்றிய இடமான சீனாவின் வுஹான் நகரில் உலக சுகாதாரத் தாபனமான WHO இந்த nCoV அல்லது SARS-CoV-2 என இப்போது அறியப் படும் புதிய வகை கொரோனா வைரஸை அடையாளம் கண்டது. ஜனவரி 7 ஆம் திகதி 2020 ஆமாண்டு WHO உலகளாவிய அவசர நிலையைப் பிரகடனம் செய்தது. விரைவில் இந்த கோவிட்-19 எனப்படும் வைரஸ் வேகமெடுத்து உலகம் முழுதும் பரவியது. இதனால் மார்ச் மாதம் WHO உலகளாவிய பெரும் தொற்று பிரகடனம் செய்தது. இதன் பின் உலகின் பல நாடுகளில் லாக்டவுன் கொண்டு வரப்பட்டு உலகம் முடங்கியது. மோசமான பொருளாதார வீழ்ச்சியும், பஞ்சமும் மனித இனத்தை ஆட்கொண்டது.

இன்றைய நிலையில் அதாவது 2020 டிசம்பர் 31 ஆம் திகதி உலகம் முழுதும் 83.2 மில்லியன் கொரோனா தொற்றுக்களும், 1.8 மில்லியன் இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.


ஜனவரி 2, 2020 -

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் கடும் வெள்ளம் ஏற்பட்டதில் 30 000 பேர் இடம்பெயர்ந்தனர். கனமழை, வெள்ளம் காரணமாக 1000 கணக்கானவர்கள் வீடுகளை இழந்தும், 30 பேர் பலியாகியும் இருந்தனர். புத்தாண்டுத் தினத்தில் ஏற்பட்ட இந்த சோகத்தில் இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர்.

ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகள் மீதான அமெரிக்க வான் தாக்குதலில் 30 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டதற்குப் பழி வாங்க ஈராக் தலைநகர் பக்தாத்தில் இருந்த அமெரிக்கத் தூதரகம் பொது மக்களால் சூறையாடப் பட்டது. பின்னதாக எக்காரணம் கொண்டும் ஈரான் மீது போர் தொடுக்கப் படாது என டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜனவரி 3 -

ஈரானின் 2 ஆவது சக்தி வாய்ந்த நபரும், அந்நாட்டு இராணுவத்தின் மேயர் ஜெனரலுமான காசெம் சுலைமானி அமெரிக்க டிரோன் தாக்குதலினால் பக்தாத்தில் வைத்துக் கொல்லப் பட்டார். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்தது. ஈரானும், அமெரிக்காவும் பரஸ்பரம் போர் எச்சரிக்கை விடுத்துக் கொண்டன. அமெரிக்க இராணுவத்தை உலகின் முதல் நாடாக ஈரான் தீவிரவாத இயக்கமாக அறிவித்தது. இதுமட்டுமன்றி சுலைமானியின் இறுதிச் சடங்கில் திரண்ட இலட்சக் கணக்கான மக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 5 -

அவுஸ்திரேலியாவில் மோசமான காட்டுத் தீயில் சிக்கி 25 பேர் பலியானார்கள். இக்காட்டுத்தீக்கு 1.2 கோடி ஏக்கர் காடு அழிந்ததாகவும், 48 கோடி விலங்குகள் பலியானதாகவும் கணிப்பு வெளியானது.

ஜனவரி 8 -

ஈரானில் உக்ரைனின் கியேவ் நோக்கிப் புறப்பட்ட போயிங் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 176 பயணிகளும் பலியானார்கள். பின்பு நடைபெற்ற விசாரணையில், போர்ப் பதற்றம் காரணமாக மனிதத் தவறினால் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதாகவும், இதில் உயிரிழந்தவர்களுக்காகத் தாம் வருந்துவதாகவும் ஈரான் அதிபர் றௌஹானி தெரிவித்தார்.

தமது இராணுவத் தளபதி சுலைமானியின் கொலைக்குப் பழி வாங்க ஈரான் துருப்புக்கள், ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தின.

ஜனவரி 10 -

காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசர் ஹரி மேகன் தம்பதியினர், பரம்பரை சொத்துக்களைப் புறக்கணித்து, பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி வட அமெரிக்கா செல்வதாக முடிவெடுத்தனர். ஜனவரி 14 ஆம் திகதி இவர்களது முடிவுக்கு எலிசபெத் மகாராணி சம்மதம் தெரிவித்தார்.

ஜனவரி 12 -

தைவான் அதிபர் தேர்தலில் பதவியில் இருந்த அதிபர் சாய் இங் வென் மீண்டும் அபார வெற்றி பெற்று அதிபராகத் தேர்வானார்.

மனிலா அருகே டால் எரிமலை சீற்றமடைந்ததில், 8000 பொது மக்கள் வெளியேற்றப் பட்டனர்.


ஜனவரி 13 -

தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் பாகிஸ்தான் முன்னால் அதிபர் முஷராபுக்கு பெஷாவர் நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை லாகூர் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

ஜனவரி 15 -

அமெரிக்கா சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்காவிடம் இருந்து கார் உதிரிப் பாகங்கள், விமானம், வேளாண்மை இயந்திரங்கள் அடங்கலாக 8000 கோடி பெறுமதியான பொருட்களைக் கொள்வனவு செய்யவும், 5000 கோடி டாலர் பெறுமதி கொண்ட கச்சா எண்ணெய், எரிசக்தித் துறை சார்ந்த பொருட்கள் மற்றும் 3500 கோடி டாலர் பெறுமதியான சேவை போன்றவற்றை இன்னும் 2 ஆண்டுகளுக்குள் வாங்கவும் சீனா முடிவெடுத்தது.

ஜனவரி 16 -

அமேசன் நிறுவனர் ஜெப் பெசோஸ் இந்தியாவில் பலகோடிகள் முதலீடு! அவரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்திய மக்கள்

ஜனவரி 17 -

ரஷ்யாவின் புதிய பிரதமராக மிக்கேல் நியமனம் !

ஜனவரி 22 -

அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலகின் 2 ஆவது நாடாக விண்வெளிப் படையை அமைக்கும் திட்டத்தில் ஜப்பான்

ஜனவரி 25 -

சீனாவில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளித்த மூத்த டாக்டர் பலியானார். இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 27 -

ஆப்கானிஸ்தானின் ஹெராட் என்ற பகுதியில் இருந்து காபூல் நோக்கிச் சென்ற போயிங் 737-400 ரக விமானம் விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 83 பேரும் பலி

ஜனவரி 28 -

கொரோனா வைரஸ் தாக்கத்தினைக் கணிக்கத் தவறிவிட்டோம் என உலக சுகாதார அமைப்பு வருத்தம்

பெப்ரவரி 3 -

வெட்டுக்கிளி கூட்டத்தின் தாக்குதலில் பாகிஸ்தான், அவசரநிலை பிரகடனம்

பெப்ரவரி 6 -

விண்ணில் அதிகநாட்கள் பணியாற்றிய கிறிஸ்டினா கோச் என்ற பெண் விண்வெளி வீராங்கணை பூமிக்குத் திரும்பினார்.

பெப்ரவரி 8 -

சிரிய ஏவுகணைத் தாக்குதலில் இருந்து நூழிலையில் 172 பயணிகளுடன் சென்ற ஏர்பஸ் விமானம் தப்பித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு

பெப்ரவரி 9 -

அண்டார்ட்டிக்காவில் வரலாற்றில் மிக அதிகபட்ச 2 ஆவது வெப்பநிலையாக அண்மையில் 18.3 செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவு

பெப்ரவரி 13 -

4 ஆவது முறையும் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதில் ஈரானுக்குத் தோல்வி!

பெப்ரவரி 18 -

ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரஃப் கனி 2 ஆவது முறையும் தேர்வு!

பெப்ரவரி 21 -

இந்திய குடியுரிமைச் சட்டத் திருத்தம் இந்திய முஸ்லீம்களுக்கு சாதகமாக இல்லாது போகலாம் : சர்வதேச மத சுதந்திர ஐக்கிய அமெரிக்க ஆணையம்

பெப்ரவரி 25 -

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தனது பிரதமர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் திடீர் ராஜினாமா செய்தார்

மார்ச் 9 -

ஆப்கானில் இரு தலைவர்கள் அதிபராகப் பதவியேற்பு! : விழாவில் குண்டு வெடிப்பு, வன்முறை

மார்ச் - 11

ஆப்கானில் இருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வாபஸ் பெற முடிவு! : 1500 தலிபான்களை விடுவிக்க அஷ்ரப் கனி இணக்கம்

துருக்கியில் இருந்து ஐரோப்பா நுழைய முயன்ற 1000 பேர் கிறீஸ் எல்லையில் தடுப்பு!

மார்ச் -16

அண்டார்ட்டிக்கா மற்றும் கிறீன்லாந்தில் 6 மடங்கு அதிக வேகத்தில் பனி உருகல்! : கடல்மட்டம் உயரும் அபாயம்!

மார்ச் -17

அலிபாபா நிறுவனர் ஜேக் மாவின் நேசக்கரம் டிரம்பை விட அதிக உதவிகரமானது! : அமெரிக்கர்கள் உருக்கம்

மார்ச் -19

நியூசிலாந்தில் கருக்கலைப்பை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

மார்ச் - 26

சுற்றுச்சூழல் மாசில் சீனாவின் பங்கை வெளிச்சம் போட்டுக் காட்டிய கொரோனா!

கோவிட்-19 இனை எதிர்கொள்ள 5 டிரில்லியன் டாலர் ஒதுக்க ஜி20 நாடுகள் கூட்டணி முடிவு!

மார்ச் - 28

கோவிட்-19 தொற்று தலைகீழாக மாற்றிய இரு உலக நடப்புக்கள்!

மார்ச் - 31

கிழக்கு ஆசியா, பசுபிக் பகுதிகளில் மேலதிகமாக 11 மில்லியன் மக்கள் வறுமைக்குத் தள்ளப் படும் அபாயம்! : உலக வங்கி

ஏப்பிரல் 1 -

2 ஆம் உலகப் போருக்குப் பின் மிகப் பெரிய சவால் கொரோனா! : ஐ.நா

ஏப்பிரல் 8 -

வுஹானில் ஊரடங்கு தளர்வு! : ஜப்பானில் அவசர நிலைப் பிரகடனம்

ஏப்பிரல் 12 -

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வைத்திய சாலையில் இருந்து விடுதலை!

ஏப்பிரல் 16 -

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தென்கொரியாவில் நடந்த தேர்தலில் அதிபர் மூன் ஜே இன்னின் கட்சி வெற்றி!

ஏப்பிரல் 17 -

சுவிற்சர்லாந்தில் ஒரு மாதகாலத்தில் 33 ஆயிரம் பேர் வேலையிழப்பு !

ஏப்பிரல் 21 -

ஒரு தொற்று நோய்க்காக வரலாற்றில் முதன் முறையாக 5 வித்தியாசமான தடுப்பு மருந்துகள் ஒரே நேரத்தில் மனித உடலில் பரிசோதிக்கப் படுவது இதுவே முதன் முறை என இந்திய மருத்துவக் கவுன்சிலான ICMR தெரிவித்துள்ளது.

ஏப்பிரல் 24 -

அதிவேக இணைய சேவைக்காக, அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 60 செய்மதிகளை மேலதிகமாக விண்ணில் செலுத்தம்!

ஏப்பிரல் 28 -

கொரோனாவுக்குத் தடுப்பூசி இல்லாமல் அடுத்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது சிரமம்! : ஜப்பான்

மே 1 & 2 -

இத்தாலியர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் யூசேப்பே கொன்டே, உலகளாவிய கொரோனா தொற்றினால் 160 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்!

மே 8 -

கிழக்கு ஆப்பிரிக்காவில் கடும் வெள்ளப் பெருக்கு : 270 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு

மே 9 -

சுவிற்சர்லாந்தின் பல்வேறு நகரங்களில் கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்

மே 24 -

மெக்ஸிக்கோ சிட்டி அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகள் பழமையான விலங்குகளின் எலும்புக் கூடுகள் சிக்கின!

மே 28 -

மத்திய தரைக் கடலில் கொரோனா குப்பைகள்! : சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலை!

சைபீரிய காடுகளில் தீவிரமடைந்து வரும் காட்டுத் தீ! : பனிப்பாறைகள் உருகுவதை ஊக்குவிக்கின்றது!

மே 31 -

அமெரிக்க கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் வெள்ளையின போலிசாரால் சித்திரவதை செய்து கொலை : அமெரிக்கா முழுவதும் ஊரடங்கை மீறி வலுப்பெறும் ஆர்ப்பாட்டம்

நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் (Crew Dragon) ஓடம் இரு வீரர்களுடன் வெற்றிகரமாக ISS உடன் இணைந்தது!

ஜூன் 1 -

அமெரிக்காவில் சிவில் யுத்த அச்சம்! : வெள்ளை மாளிகை சுற்றி வளைப்பு

ஜூன் 4 -

கருப்பின இளைஞன் கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை அடக்க இராணுவத்தை அழைக்கும் டிரம்பின் முடிவுக்கு பெண்டகன் எதிர்ப்பு! முடிவு கைவிடப் பட்டது.

ஜூன் 7 -

உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையின் பின் இந்தியா சீனா இடையே இயல்பு நிலை!

ஜூன் 9 -

சுவிற்சர்லாந்து, கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உலகின் பாதுகாப்பான நாடுகளில் முதலாமிடம் என அறிவிப்பு

ஜூன் 16 -

லடாக் மோதலை அடுத்து இந்திய இராணுவம் உயர் மட்ட பேச்சுவார்த்தை

ஜுன் 17 -

வட தென் கொரிய தேசங்களுக்கிடையே போர்ப் பதற்றம்! : எல்லையில் இராணுவம் குவிப்பு

ஜூன் 24 -

7.4 ரிக்டர் மெக்ஸிக்கோ நிலநடுக்கத்தில் 6 பேர் பலி! : பலத்த சேதம்

ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியாவை நிரந்தரமாக இணைக்க ரஷ்யா ஆதரவு!

ஜூன் 25 -

கொரோனாவை எதிர்கொள்வதில் உலக நாடுகள் இடையே ஒற்றுமை இல்லை! : ஐ.நா செயலாளர் கவலை

ஜூன் 26 -

லாக்டவுன் தளர்வுக்குப் பின் 11 ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

ஜூன் 30 -

மிக மோசமான கொரோனா பாதிப்பு இனிமேல் தான் வரவுள்ளது! : உலக சுகாதார அமைப்பு

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2வது அலை தோன்றிய போது, மிக மோசமான பாதிப்புக்களைச் சந்திங்கத் தொடங்கின. தினசரி தொற்று வீதத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அண்டைய நாடுகள் சில சுவிற்சர்லாந்தை ஆபத்து நாடுகளின் பட்டியலில் சேர்த்தும் கொண்டன.

தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.