உலகம்

சுவிற்சர்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுக்கள் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன. மத்திய கூட்டாட்சி அரசு இம்மாத இறுதியில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்க ஆலோசித்துள்ளது.

இந்நிலையில் அதிர்ச்சி தரும் செய்தியாக கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமான தொடர்ச்சியான தொழில் முடக்கங்களினால், அடுத்து வரும் மாதங்களில் பெரும் பணியிழப்புக்கள் ஏற்படக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே சில நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் குறைப்பினை ஆரம்பித்திருக்கும் நிலையில்,
ஹோட்டல் மற்றும் உணவகங்கள், என்பவற்றில் கடந்த ஆண்டு சுமார் 40 ஆயிரம் பேர் வரை பணியிழந்தனர் என்றும், இந்த ஆண்டு மேலும் 10,000 பேர் வேலையிழக்க வேண்டிவரலாம் எனவும், காஸ்ட்ரோ சூயிஸ் தலைவர் காசிமிர் பிளாட்ஸர் செய்திச் சேவையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

வணிக சுற்றுலா அல்லது நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகளைச் சார்ந்துள்ள ஹோட்டல் மற்றும் உணவகத் துறையில் உள்ள நிறுவனங்களே நெருக்கடியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன எனவும், சில மலை இடங்களும், ஏரி மற்றும் கிராமப்புறங்களில் இது ஒரளவு காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜூரா, ஆர்காவ், வலாயிஸ், ஆகிய மூன்று மாநிலங்களில், இந்தத் துறைகளில் பணியாற்றும் பல வெளிநாட்டினர் பணியிழப்பு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜூரா மாநிலத்தில் 10.2 சதவிகித வேலையின்மையும், ஆர்காவ் மாநிலத்தில், 7.6 சதவீதமும், அதற்கடுத்து வலாய்ஸ் மாநிலத்தில் 7.3 சதவீதமானோரும் வேலையிழப்பில் உள்ளதாக அறியப்படுகிறது.

பிரபலமான சுற்றுலாத் தலமான வலாயிஸைப் பொறுத்தவரையில், ஹோட்டல் மற்றும் உணவகத் தொழில்களின் மந்தநிலை வேலையின்மை பெருமளவில் காரணமாகிறது. இந்த இரண்டு துறைகளுமே பெரும்பாலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் துறைகளாகும்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 

“மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு” என்பதை, அரசுக்குள்ளே இருக்கும் தமிழர்கள் ஜனாதிபதிக்கு கூற வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று காலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் கடுமையாக உள்ள கொரோனா தொற்றின் 2வது அலை நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கத்தார் அரசு அனுப்பி வைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிரங்கியதாக அதிகாரப்பூர்வமாக சினா அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுக்கள் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன. மத்திய கூட்டாட்சி அரசு இம்மாத இறுதியில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்க ஆலோசித்துள்ளது.