மியான்மாரில் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் 100 நாட்களுக்கும் அதிகமாக இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நீடிக்கின்றது.
அண்மையில் கைது செய்யப் பட்ட முந்தைய அரசைச் சேர்ந்த முன்னால் எம்பிக்கள் அனைவரையும் மியான்மார் இராணுவம் தீவிரவாதிகளாக அறிவித்துள்ளது. மியான்மாரில் முன்னால் அரச தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உட்பட ஆளும் கட்சியைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட தலைவர்கள் சிறை வைக்கப் பட்டுள்ளனர்.
அங்கு நாடு முழுதும் ஓராண்டுக்கு அவசர நிலையையும் இராணுவம் பிரகடனப் படுத்தியுள்ளது. 2020 நவம்பரில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டியே மியான்மார் இராணுவம் தனது ஆட்சிக் கவிழ்ப்பை நியாயப் படுத்தியது. ஆனால் ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் அடக்கு முறைக்கு எதிராக வீதிகளில் கிளர்ந்தெழுந்த மக்களை இரும்புக் கரம் கொண்டு மியான்மார் இராணுவம் ஒடுக்கியது. இதுவரை இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 700 இற்கும் அதிகமான போராட்டக் காரர்கள் கொல்லப் பட்டுள்ளனர்.
இந்த போராட்டக் காரர்களை ஒருங்கிணைத்த இராணுவத்திடம் இருந்து தப்பிய ஆளும் கட்சி எம்பிக்களது பிரதிநிதிகள் குழுவான சி.ஆர்.பி.எச் என்ற அமைப்பையும் அதன் மக்கள் படையையும் தான் தற்போது மியான்மார் இராணுவம் தீவிரவாதிகளாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. இந்த அமைப்பு நாட்டின் மக்களாட்சி அரசாகச் செயற்பட சர்வதேச அங்கீகாரத்தை நாடுவது குறிப்பிடத்தக்கது.
இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -
கோவிட் 19 பெரும் தொற்றால் கடந்த ஆண்டு தள்ளிப் போடப் பட்ட சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்ட படி 2021 ஆமாண்டு ஜூலை 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை டோக்கியோவில் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் ஜான் கோயட்ஸ் உறுதியளித்துள்ளார்.
ஜப்பானில் மீண்டும் கோவிட்-19 பெரும் தொற்றின் பரவல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எல்ல விதமான கொரோனா தடுப்பு பாதுகாப்பு அம்சங்க்ளுடன் ஒலிம்பிக் போட்டி நிச்சயம் நடைபெறும் என்றும் இதற்காக ஜப்பான் அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் ஜான் கோயட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்