இலங்கை

“மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு” என்பதை, அரசுக்குள்ளே இருக்கும் தமிழர்கள் ஜனாதிபதிக்கு கூற வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தெற்கில் கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்ட சிங்கள மக்களின் நினைவாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தூபிகளை போன்று போரில் மாண்ட தமிழ் மக்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இலங்கை- இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நொறுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டவட்டமான மானங்கெட்ட செய்கையை நாம் கண்டிக்கின்றோம். அத்துடன் மாண்டவர்களை நிந்திக்கும் இந்த அநாகரீக செயலை கண்டிக்கும்படி சிங்கள முற்போக்கு சக்திகளையும் பெளத்த சமூக தலைவர்களையும் நாம் அழைக்கின்றோம்.

“கொரோனா நோய் ஒழிப்பில் தோல்வி” “துறைமுக நகர் சீனாவுக்கு தாரைவார்ப்பு” ஆகிய நாட்டின் உண்மையான தேசிய பிரச்சினைகளை சிங்கள மக்களின் கவனத்துக்கு வராமல் தடுக்க அவ்வப்போது தமிழ் முஸ்லிம் மக்களின் மீது இனவாதம் காட்டி தேசிய கவனத்தை வேறு பக்கம் கொண்டு போகும் அரசின் நீண்டநாள் தந்திர அரசியல் ஒரு “மானங்கெட்ட அரசியல் பிழைப்பு” என்பதை அரசின் உள்ளே இருக்கும் தமிழ்- முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்து கூற வேண்டும்.

இந்த திட்டவட்டமான மானங்கெட்ட செய்கையை நாம் கண்டிக்கின்றோம். அத்துடன் மாண்டவர்களை நிந்திக்கும் இந்த அநாகரீக செயலை கண்டிக்கும்படி சிங்கள முற்போக்கு சக்திகளையும் பெளத்த சமூக தலைவர்களையும் நாம் அழைக்கின்றோம்.
தெற்கில் 1971, 1989 கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்ட சிங்கள மக்களின் நினைவாக தூபிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று போரில் மாண்ட தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நிர்மாணிக்கப்படுகிறது.

இது இன்று இலங்கை இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நொறுக்கப்படுகிறது.ஆகவே மாண்டவர்களை நிந்திக்கும் இத்தகைய அநாகரீக செயல்களை கண்டிக்காமல் சிங்கள முற்போக்கு சக்திகளும் பெளத்த சமூக தலைவர்களும் தொடர்ந்தும் மௌனமாக இருக்க முடியாது.

அதேபோல் மாண்டுப்போன தமிழ் மக்களை நேரடியாக குறி வைத்து அவமானப்படுத்தும் இந்நடவடிக்கையை தமிழ் முஸ்லிம் உறவை விரும்பும் அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கட்சிகளும் கண்டிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 

“மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு” என்பதை, அரசுக்குள்ளே இருக்கும் தமிழர்கள் ஜனாதிபதிக்கு கூற வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று காலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் கடுமையாக உள்ள கொரோனா தொற்றின் 2வது அலை நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கத்தார் அரசு அனுப்பி வைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிரங்கியதாக அதிகாரப்பூர்வமாக சினா அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுக்கள் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன. மத்திய கூட்டாட்சி அரசு இம்மாத இறுதியில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்க ஆலோசித்துள்ளது.