“பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்யலாம். ஆனால் உயிர்களிற்கு ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய முடியாது.” என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் உயிர்களை காப்பாற்றுவது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ரணில் விக்ரமசிங்க, ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சரிசெய்ய முடியும். ஆனால் உயிர்களிற்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவுவது, ஏற்கனவே மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு பாரிய அடியாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள முன்னாள் பிரதமர், இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி உயிர்களை காப்பாற்றுவது அவசியம். இதனை செய்தால் எங்கள் பொருளாதாரத்திற்கான பாதிப்பை குறைக்கலாம் எனவும் கூறியுள்ளார்.