இந்தியா

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று காலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கத்தால் தமிழகத்தில் பாதிப்பு உச்சம் அடைந்துவருகிறது. இதனால் பரவலை கட்டுப்படுத்த கடந்த 10ந் திகதி முதல் வருகிற 24 ஆம் திகதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

எனினும் கொரோனா பரவல் அதிகரிக்கின்றமையால் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று சென்னையில் நடைபெற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவ வல்லுனர்களுடன்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திதினார். இதில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு ஊரடங்கு அமலாக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 

“மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு” என்பதை, அரசுக்குள்ளே இருக்கும் தமிழர்கள் ஜனாதிபதிக்கு கூற வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று காலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் கடுமையாக உள்ள கொரோனா தொற்றின் 2வது அலை நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கத்தார் அரசு அனுப்பி வைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிரங்கியதாக அதிகாரப்பூர்வமாக சினா அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுக்கள் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன. மத்திய கூட்டாட்சி அரசு இம்மாத இறுதியில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்க ஆலோசித்துள்ளது.