இந்தியா

தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் உச்சம் பெற்றுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் கொரோனாத் தொற்றுக்குள்ளாவோர் தொகை உயர்ந்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக, சென்னை நகரில் தற்காலிக சிகிச்சை மையங்கள் வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 100 க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட, கொரோனா தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று மேலும் சில தற்காலிக மையங்களை உருவாக்க தமிழக அரசு முனைவதாகவும் தெரிய வருகிறது.

மேலும் இவ்வாறான தற்காலிக சிகிச்சை மையங்கள் உருவாக்குவதற்குத் தேவையான உதவிகளையும் பலரும் வழங்கி வருகின்றார்கள். தனியார் அமைப்புகளும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி உதவுகின்றன. டி.வி.எஸ் மோட்டார் - சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் சீனிவாசன் சர்வீசஸ் அறக்கட்டளை சார்பில், 18 கோடி ரூபாய் பெறுமதியான 1600 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளது.

தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உடனடியாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், " இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில், நாள்தோறும் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்திற்குத் தேவை என்பதை வலியுறுத்திக் கேட்டிருந்தேன். பிரதமர் விரைந்து அனுப்பிய பதிலில், உடனடியாக 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்திற்குத் தருகிறோம் என உறுதியளித்தார். இது நம் தேவைக்கு ஏற்ப முழுமையான அளவு இல்லையெனினும், மாநில அரசின் கோரிக்கைக்கு உடனடியாக செவிமடுத்துச் செயலாற்றியுள்ளார் பிரதமர். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தேவைப்படும் அளவிலான ஆக்சிஜனையும் விரைந்து அனுப்பிட ஆவன செய்வார் என நம்புகிறேன்." எனக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும், துறை சார்ந்த உயரதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இது தவிர, திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.  திமுக எம்பிக்களும், எம்எல்ஏக்களும், தமது ஒருமாத ஊதியத்தை, கொரோனா நிவாரண நிதிக்கு அளிப்பார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 

“மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு” என்பதை, அரசுக்குள்ளே இருக்கும் தமிழர்கள் ஜனாதிபதிக்கு கூற வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று காலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் கடுமையாக உள்ள கொரோனா தொற்றின் 2வது அலை நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கத்தார் அரசு அனுப்பி வைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிரங்கியதாக அதிகாரப்பூர்வமாக சினா அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுக்கள் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன. மத்திய கூட்டாட்சி அரசு இம்மாத இறுதியில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்க ஆலோசித்துள்ளது.