இந்தியா

கொரோனா தடுப்பூசி ஒருவருக்கு இரண்டு டோஸ்கள் போடப்பட்டுவரும் நிலையில் இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாம் டோஸுக்கான கால இடைவெளியை அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த அங்கு சீரம் இந்தியாவின் கோவிஷீல்ட் போடப்பட்டுவருகிறது. நாடுமுழுவதும் வேகமாக தடுப்பூசி போடும் பணி நடைப்பெற்றுவருகிறது.

பயன்பாட்டில் உள்ள இந்திய தயாரிப்பான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பெற்றவர்களின் எண்ணிக்கை 18 கோடியை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் இரண்டாம் தவணையாக போடப்படவுள்ள கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் கால இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூறியுள்ளது.

முன்னதாக மார்ச் மாதத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு இடையிலான இடைவெளி 4-6 வாரங்களாக இருந்தபோது அதனை 4-8 வாரங்களாக அதிகரிக்க மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது. தற்போது அதனை மேலும் 12 முதல் 16 வாரங்களாக்க நிபுணர் குழு பரிந்துரைத்திருக்கிறது.

இதேவேளை 18வயதிற்கு கீழ்பட்ட சிறார்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுவருவதாகவும் விரைவில் அவை தன்னாவளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 

“மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு” என்பதை, அரசுக்குள்ளே இருக்கும் தமிழர்கள் ஜனாதிபதிக்கு கூற வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று காலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் கடுமையாக உள்ள கொரோனா தொற்றின் 2வது அலை நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கத்தார் அரசு அனுப்பி வைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிரங்கியதாக அதிகாரப்பூர்வமாக சினா அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுக்கள் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன. மத்திய கூட்டாட்சி அரசு இம்மாத இறுதியில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்க ஆலோசித்துள்ளது.