விளையாட்டு

இன்று ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இடம்பெற்ற ஃபிபா உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 4 இற்கு 2 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் 2 ஆவது முறையும் சேம்பியன் பட்டம் வென்றுள்ளது பிரான்ஸ்.

இம்முறை உலகக் கிண்ணக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை எந்தவொரு போட்டியிலும் தோற்காத குரோஷிய அணி கண்ணீருடன் வெளியேறியுள்ளது.

போட்டி தொடங்கி 18 ஆவது நிமிடத்தில் Free Kick வாய்ப்பில், பிரான்ஸின் கிரீஸ்மேன் தூக்கி அடித்த பந்தை குரோஷியாவின் மரியோ மாண்ட்ஜுகிச் என்ற வீரர் எதிர்பாராத விதமாக தலையால் அடித்து சேம் சைடு கோலாக மாற்றியதால் பிரான்ஸ் அணி முதல் கோலை ஈட்டியது. எனினும் 28 ஆவது நிமிடத்தில் குரோஷியாவின் பெரிசிச் பந்தைக் கோலாக மாற்றி 1 இற்கு 1 என சமநிலை பெறச் செய்தார். இதை அடுத்து போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது.

ஆனால் குரோஷியாவின் மகிழ்ச்சி நெடு நேரம் நீடிக்கவில்லை. ஆட்டத்தின் 38 ஆவது நிமிடத்தில் கோல் கம்பத்துக்கு அருகில் குரோஷிய அணி வீரரின் கையில் பந்து பட்டதால் பிரான்ஸ் அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பு சாதகமானது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பிரான்ஸ் அணி வீரர் கிரீஸ்மேன் கோல் அடித்ததால் முதல் பாதி முடிவில் பிரான்ஸ் அணி 2 இற்கு 1 என முன்னிலை வகித்தது. 2 ஆவது பாதியில் மிகவும் தீவிரமாக அட்டாக் பாணியில் குரோஷியா திறமையாக விளையாடியது. பல கோல்கள் பிரான்ஸ் அணி வீரர்கள் மற்றும் கோல் கீப்பரால் திறமையாகத் தடுக்கப் பட்டன.

பதிலுக்கு சளைக்காது விளையாடிய பிரான்ஸ் அணியும் அதே அட்டாக் பாணியைப் பின்பற்றியது. 59 ஆவது நிமிடத்தில் போக்பா ஒரு கோலும் 65 ஆவது நிமிடத்தில் எம்பாப்வே ஒரு கோலும் அடித்தனர். 69 ஆவது நிமிடத்தில் பிரெஞ்சு கோல் கீப்பரிடம் இருந்து லாகவமாக பந்தை சுருட்டி குரோஷிய வீரர் மாண்ட்ஜுகிச் கோலாக்கிய போதும் முடிவில் பிரான்ஸ் அணி 4 இற்கு 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பிரான்ஸ் அணி ஏற்கனவே 1998 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணி என்பதால் இம்முறை 2 ஆவது முறையும் அது உலகச் சேம்பியன் ஆகியுள்ளது. முன்னதாக 1998 ஆம் ஆண்டு ஃபிபா போட்டியில் அரையிறுதியில் பிரான்ஸுடன் மோதி குரோஷியா வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய இறுதிப் போட்டியை ரஷ்ய அதிபர் புடின், பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோன் மற்றும் குரோஷிய அதிபர் ஆகியோர் நேரில் பார்த்து ரசித்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒன்று கூடிய பல்லாயிரக் கணக்கான மக்கள் தமது நாட்டின் வெற்றியை குதூகலத்துடன் கொண்டாடினர்.

பிரான்சின் வெற்றியை கொண்டாடுவதற்காக பாரிசின் ஈபிள் டவர் பகுதியிலும், சுதந்திர சதுக்கப்பகுதியிலும், கூடியிருந்த மக்கள் தொகையினை, தொலைக்காட்சி வர்ணனையாளர் குறிப்பிடுகையில் மொத்தக் குரோஷியாவும் குழுமியிருப்பது போலத் தெரிகிறது என்றார். அவ்வாறான ஒரு சிறிய நாட்டின் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி, இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது என்பதே பெருமைக்குரிய விடயமாக அமைந்திருந்தது என்பது மட்டுமல்லாது, பிற அணிகளுக்கும் நம்பிக்கை தரும் வகையிலும் அமைந்திருந்தது.

இறுதியாட்டத்தினை நேரில் காண்பதற்காகவும், தமது அணி வீரர்களை உற்சாகப்படுத்தவும், பிரான்ஸ் மற்றும் குரோஷியாவின் அரச தலைவர்கள் அரங்கிற்கு வந்திருந்தார்கள். இரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அவர்களும் வந்திருந்தார்கள். ஆயினும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் குரோஷியா அதிபர் கொலின்டா கிறாபர் கிதாறோவிக் (Kolinda Grabar-Kitarović).

ஆட்டம் நிறைவு பெற்றதும், காலரியில் அமர்ந்து ஆட்டத்தினைக் கண்ணுற்ற, பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மக்றோன் (Emmanuel Macron)அவர்களுக்கு மகிழ்ச்சியோடு கைலாகு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டார். பின்னர் பரிசளிப்பு மைதானத்திற்கு அனைவரும் வந்தபோது மழை கொட்டத் தொடங்கியது. ஆனாலும், மழையில் நனைந்தபடியே இரு அணி வீரர்களையும் ஆரத்தழுவிப் பாராட்டுக்களைத் தெரிவித்து உற்சாகப்படுத்தியமையும், குரோஷிய அணியின் பயற்றுவிப்பாளர் Zlatko Dalić, மற்றும் அணித்தலைவர், Luka Modrić ஆகியோரைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தியமையும், கவனம் பெற்றிருந்தது.

இம்முறை ஃபிபா உலகப் போட்டிகளில் தங்கக் காலணி விருதை இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் வென்றார்.

தங்கப் பந்து விருந்து குரோஷியாவின் கேப்டன் லூகா மோட்ரிச் வென்றார். தங்கக் கையுறை விருது பெல்ஜியம் அணியின் தியாபட் கோர்டாய் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரிய பெரிய அணிகளையெல்லாம் ஓரம் கட்டி விட்டு காலிறுதியில் ரஷ்யாவை வீழ்த்தி இறுதிப் போட்டி வரை வந்து விளையாடிய சிறிய ஐரோப்பிய நாடான குரோஷியாவை அனைத்து காற்பந்து வல்லுனர்களும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் முக்கிய தருணங்கள் :

 

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.