விளையாட்டு

ஞாயிற்றுக்கிழமை குரோஷியா மற்றும் டென்மார்க் ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற நாக் அவுட் போட்டியும் மிகவும் விறுவிறுப்பாக பெனால்டி சூட் அவுட் வரை சென்றது.

ஏற்கனவே இவ்விரு அணிகளும் தமக்கு அளிக்கப் பட்ட நேரத்தில் தலா 1 கோல்கள் போட்டிருந்த நிலையில் பெனால்டி சூட் அவுட்டில் 3 இற்கு 2 என்ற கணக்கில் குரோஷியா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

திங்கட்கிழமை மாலை பிரேசில் மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் முதல் 45 நிமிடங்களுக்குள் எந்தவொரு அணியும் கோல் அடிக்கவில்லை. 2 ஆவது 45 மணி நேர விளையாட்டில் 51 ஆவது நிமிடத்தில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் அணிக்காக ஒரு கோலினை ஈட்டித் தந்தார். தொடர்ந்து மெக்ஸிக்கோ சளைக்காது விளையாடிய போதும் 88 ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரோபர்டோ கோல் அடிக்க பிரேசில் 2 இற்கு 0 என்ற கணக்கில் மெக்ஸிக்கோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

திங்கட்கிழமை மாலை ஜப்பான் மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகள் மோதிய போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும் எதிர்பாரத விதமாக அதாவது ஜப்பான் ரசிகர்களுக்குக் கடும் ஏமாற்றத்தைத் தரும் விதமாக அமைந்தது என்றே கூறலாம். ஏனெனில் முதல் பாதியில் இவ்விரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. 2 ஆவது பாதியில் 48 ஆவது நிமிடத்தில் ஜப்பான் முதல் கோலையும் தொடர்ந்து 52 ஆவது நிமிடத்தில் 2 ஆவது கோலையும் அடித்து முன்னிலையில் காணப் பட்டது. இதனால் ஜப்பான் நிச்சயம் வெற்றி பெறும் என்றே எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் 69 ஆம் நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்த பெல்ஜியம் 74 ஆம் நிமிடத்தில் பெலானி அடித்த சூப்பர் கோலினால் ஜப்பானைச் சமநிலை செய்தது. எனவே இப்போட்டிக்கு மேலதிக நேரம் அளிக்கப் படலாம் என எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் ஆட்ட நேரம் முடிய 1 விநாடி இருக்கையில் மியூனர் அளித்த பந்தை சாதல் கோல் ஆக்க 3 இற்கு 2 என திரில் வெற்றி பெற்று பெல்ஜியம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

நாளை சுவீடனுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையே ஒரு போட்டியும் கொலம்பியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே ஒரு போட்டியும் இடம்பெறுகின்றன. மேலும் இப்போட்டிகளை அடுத்து நாளைய தினத்துடன் 2 ஆம் சுற்று நாக் அவுட் போட்டிகள் யாவும் நிறைவு பெறுகின்றன. இம்முறை உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கான காலிறுதிப் போட்டிகள் 2 நாட்கள் இடைவேளைக்குப் பின்பு வெள்ளிக்கிழமை முதல் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.