விளையாட்டு

புதன்கிழமை ரஷ்யாவில் நடைபெற்ற கால் பந்துப் போட்டித் தொடரில் நடப்பு உலகச் சேம்பியனான ஜேர்மனி போட்டி முடிவடைய மேலதிக நேரம் 6 நிமிடம் தரப்பட்ட வேளையில் தென்கொரிய அணியின் அபார இரு கோல்களினால் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளது.

இதன் மூலம் நடப்பு உலக சேம்பியனான ஜேர்மனி 2 ஆம் நாக் அவுட் சுற்றுப் போட்டிக்கு முன்னேற முடியாது வெளியேறுகின்றது.

மறுபுறம் புள்ளிப் பட்டியலில் முன்னணியில் உள்ள F குழுவைச் சேர்ந்த மெக்ஸிக்கோ மற்றும் சுவீடன் ஆகிய அணிகளுக்கு இடையே புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் சுவீடன் 3 கோல்களை அடித்து இலகு வெற்றியை சுவீகரித்துள்ளது. இதேவேளை புதன்கிழமை குழு E ஐச் சேர்ந்த அணிகளும் பலப் பரீட்சை நடத்தின. இதில் சுவிட்சர்லாந்து மற்றும் கோஸ்டா ரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்து ஆட்டம் சமநிலையில் முடிந்தது. சுவிட்சர்லாந்து வெல்லக் கூடிய வாய்ப்பு இருந்தும் கடைசி நேரத்தில் அந்நாட்டு அணி வீரர் மேற்கொண்ட தவறால் கோஸ்டா ரிக்காவுக்கு வழங்கப் பட்ட பெனால்டி சூட் அவுட் மூலம் அந்த அணி கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைப் படுத்தியது.

மறுபுறம் பிரேசில் மற்றும் சேர்பியா ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பிரேசில் இரு கோல்களை அடித்து இலகு வெற்றியை ஈட்டியது. இன்று வியாழக்கிழமை குழு H ஐ சேர்ந்த செனெகல் கொலம்பியாவும் மற்றும் ஜப்பான் போலந்தும் பலப் பரீட்சை நடத்துகின்றன. மேலும் குழு G ஐச் சேர்ந்த இங்கிலாந்து பெல்ஜியம் மற்றும் பனாமா துனிசியா ஆகிய நாடுகளும் இன்று பலப் பரீட்சை நடத்துகின்றன. மேலும் இன்று வியாழக்கிழமையுடன் முதல் சுற்றுப் போட்டிகள் யாவும் நிறைவு பெறுகின்றன.

சனிக்கிழமை 16 அணிகள் பங்கேற்கும் 2 ஆவது தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகின்றன. இதுவரை தகுதிச் சுற்றுக்கு குழு A இல் உருகுவே மற்றும் ரஷ்யாவும், குழு B இல் ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லும், குழு C இல் பிரான்ஸ் மற்றும் டென்மார்க்கும், குழு D இல் குரோஷியா மற்றும் ஆர்ஜெண்டீனாவும், குழு E இல் பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்தும், குழு F இல் சுவீடன் மற்றும் மெக்ஸிக்கோவும், குழு G இல் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியமும், குழு H இல் ஜப்பான், செனகல் அல்லது கொலம்பியா ஆகிய 3 அணிகளில் ஏதாவது இரு அணியும் இன்று தேர்வாகும் நிலையிலும் உள்ளன.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.