ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய இன்றைய போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் உத்தப்பா 29 ரன்களும், தினேஷ் கார்த்திக் 26 ரன்களும் எடுத்தனர்.
ஆண்ட்ரே ரசல் 36 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்து கொல்கத்தா அணியை வீழ்த்தியது.