திரைப்படவிழாக்கள்

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

அதோடு கொரோனா பாதிப்பினால், திரைப்பட விழாவில் திரையிடும் பெரும்பாலான திரைப்படங்களை ஆகஸ்டு 5-15 ம் திகதிக்குள் இணைய வெளியில் இலவசமாக எவரும் பார்க்கும் வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தனர்.

Open Door திரைப்படங்களில், சட்டென பார்க்கத் தூண்டியது ஒரு மலேசிய இந்திய இயக்குனரின் பெயர். மலேசியாவின் BMW Short Stories களில் போட்டியிட்டு, தனது குறுந்திரைப்படத்திற்காக உயரிய விருதை வென்றவர் ஆனந்த் சுப்ரமணியம். மலேசியாவில் பிறந்து வளர்ந்து, பிரித்தானியாவின் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் திரைப்படத் துறையில் உயர் பட்டப்படிப்பை முடித்த அவர், தனது Colourless திரைப்படத்திற்காக சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் விருதை BMW திரைப்பட விழாவில் வென்றிருந்தார். அவருடைய கடைசி குறுந்திரைப்படம் Liar Land (பொய் உலகம்), லொகார்னோ Open Door பிரிவில் போட்டியிடுகின்றது.

16 நிமிட குறுந்திரைப்படம், மலாய், ஆங்கில மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது. வங்கிக் கொள்ளை ஒன்றில் ஈடுபடும் ஒரு காதல் ஜோடி, தங்களது பிள்ளைகளிடம், பணத்தையும், துப்பாக்கிகளையும் விட்டுவிட்டு, காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காக தலைமறைவாகின்றனர். பெற்றோரின் வன்முறை மனப்போக்கின் பாதிப்பில் வளரும் பிள்ளைகள், எப்படி அவர்களது உலகை தொட முயல்கின்றனர் என்பதே கதை.

காமர்ஷியல் விளம்பரம் போல் காட்சி அமைப்பு. வன்முறை அனைத்தும், ஒலி ஒளி வடிவங்களில் காட்சி Frame க்குள் வரமாலல் வெளியில் நின்றபடி கேட்டே மிரட்டுகின்றன. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் போது, பிள்ளைகளிடம் தொலைபேசியில் கதறும் தாய், அதை சட்டை செய்யாது, பதிலும் சொல்லாது, தொலைக்காட்சி பார்க்கும் பிள்ளைகள், நாய்க்குட்டியின் முகத்தில் சிகரெட் புகையடித்து, அதை சித்திரவதை செய்யும் அயல் இளைஞர்கள், பணக் கொள்ளையடிப்பை வீட்டிலிருந்தே விளையாடிப் பார்க்கும் பிள்ளைகள் என அனைத்தும், வன்முறை உலகின் விளிம்பில் நின்று முகத்தில் அறைவது போல் பேசுகிறது திரைப்படம். ஆனந்த் சுப்ரமணியத்தின் பார்வையில் ஒவ்வொரு செக்கன் காட்சியும் திகிலடையச் செய்கிறது.

படத்தை பார்ப்பதற்கான இணைப்பு :

https://www.locarnofestival.ch/en/LFF/locarno-2020/film/Liar-Land?fid=1170178&l=en

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

- 4தமிழ்மீடியாவிற்காக : ஸாரா

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.