திரைப்படவிழாக்கள்

புகழ்பெற்ற காற்பந்து வீரர் டியோகோ மரடோனாவை பற்றி ஒரு ஆவணத் திரைப்படம். லொகார்னோ திரைப்பட விழாவில் பியாற்சே கிராண்டே திறந்த வெளித் திரையரங்கை அப்படியே 80,90 களின்  காற்பந்து மைதானமாக மாற்றிச் சென்றது.

மரடோனாவின் தனிப்பட்ட இரு படப்பிடிப்பாளர்கள் படம்பிடித்த சுமார் 1000 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட Privte Footage காட்சிகளை விலைக்கு வாங்கி, அவற்றை மாத்திரமே வைத்து படத்தொகுப்பு உருவாக்கி அதற்கு பின்னணிக் குரல்கொடுத்து உருவாக்கப்பட்ட திரைப்படம். ஆர்ஜேண்டீனாவின் நகர்ப்புற சேரிப்பகுதி ஒன்றில் பிறந்து வளர்ந்து, ஆர்ஜெண்டீனாவின் ஜூனியர் கிளப்களுக்கு விளையாடி, பார்சிலோனா கிளப்பில் இணைந்து, பின்னர் இத்தாலியின் நாப்போலி கிளப்பால், அன்றைய காலத்துக்கு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு, இத்தாலி பிரிமியர் லீக் காற்பந்து போட்டிகளில் கடைசி இடைத்தில் இருந்த நாப்போலி கிளப்பை, மூன்று வருடங்களில் முதலிடத்தை பிடிக்க வைத்தவர் மரடோனா. அந்த வெற்றிப்பாதையை, நாப்போலி விளையாடி ஒவ்வொரு கால்ப்பது போட்டிகளிலும், அவர் அடித்த கோல் காட்சிகளை கண்முன்னே நிறுத்தி நாப்போலிக்கு மரடோனா யார் என்பதற்கான பதிலைச் சொல்கிறது.

பின்னர் உலக கோப்பை போட்டிகளில் எப்படி ஆர்ஜெண்டீனா கால்ப்பந்து அணிக்கு மரடோனா தலைமை தாங்கி உலக கோப்பையைவும்  வெற்றி கொண்டார் எனக் காண்பித்து அவரது வெற்றிப்பாதையின் உச்சியை காண்பிக்கிறது.

மரடோனா திரைப்பட இயக்குனர் அசிஃ கபடியா, லொகார்னோ மேடையில் 

அதன் பின்னர் எப்படிம, புகழின் உச்சியால் தொலைத்த, நிம்மதியான அமைதியான அன்றாட வாழ்க்கை, பின்னர் பல பெண்கள் உறவு, போதை வஸ்து வழக்கம் என்பவற்றால், வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாக மரடோனா தொலைக்கத் தொடங்கினார் என்பதனையும் படம் காண்பிக்கிறது.

எப்படி தான் வளர்த்துவிட்ட, தன்னை வளர்த்துவிட்ட நாப்போலி கால்ப்பந்து நகரம், உலக கோப்பையில் இத்தாலியின் தோல்விக்கு, ஆர்ஜெண்டீனாவை தலைமை தாங்கிய மரடோனாவே காரணமானதன் பின்னர் மரடோனாவை கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்கத் தொடங்கியது எனத் திரையில் காட்சிகள் வந்து விழும் போது பார்க்க சோகம் சூழ்கிறது.

மரடோனாவை பற்றி ஏற்கனவே பல ஆவணத் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. கால்ப்பந்தின் தீவிர ரசிகர் எனில் மரடோனாவின் முழுச் சுயசரிதையும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஆனால் பியாற்சே கிராண்டே பிரமாண்ட திறந்த்வெளித் திரையரங்கில் மரடோனாவின் முழு வாழ்க்கையும், Archive காட்சிகளில் மாத்திரமே காணும் போது, 1990 களுக்கு பிறந்து வளரும் இளையவர்கள், அன்றைய உலக கோப்பை போட்டிகளையும், மரடோனாவின் நுணுநுணுக்கமான விளையாட்டையும் மிக அருகில் இருந்து பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

இத்திரைப்படத்தின் இயக்குனரான Asif Kapadia ஏற்கனவே ஆவணத்திரைப்படங்களுக்கு அகடமி விருது பெற்றவர். 

வருடைய இந்த திரைப்படமும், மரடோனா எனும் ஒரு தனிநபரின், ஒரு தனித்துவமான மேதையின், ஒரு கால்ப்பந்து கடவுளின் காண்பிக்க முடியாத உருவப்படத்தை காண்பிக்க எத்தனித்திருக்கிறது. படத்தின் ஒரு கட்டத்தில் நாப்போலிய கால்ப்பந்து கிளப் அன்றைய வருடத்தின் நம்.1 கிளப்பாக உருவாகி சாம்பியன் லீக் போட்டிகளில் வென்று கோப்பையை பெற்றதன் பின்னர்  நாப்போலிய கால்ப்பந்து ரசிகர்கள், «நான் மரடோனாவை பார்த்துவிட்டேன், நான் மரடோனாவை பார்த்துவிட்டேன்» என உரக்க கோசமிடுவார்கள். «கடவுளை பார்த்துவிட்டேன்» என்ற அதே உணர்வுகளுடன் முழக்கமிடும் கோஷம் அது.

 - லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியாலளர்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.