திரைப்படவிழாக்கள்

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் ஒரு முக்கிய அமெரிக்க மாற்றுச் சினிமா திரைப்படம் «The Last Black Man in San Francisco».

Joe Talbot மற்றும் Jimmie Fails இணைந்து இயக்கியுள்ள இத்திரைப்படம் இருவருக்கும் முதல் திரைப்படம். படத்தின் சில நிமிடக் காட்சிகளை படம்பிடித்து, KickStarter எனப்படும் மக்கள்நிதி திரட்டும் இணையத்தளம் மூலம் பணம் கோரினர் இருவரும். நினைத்ததைவிட அதிகமாக ஆதரவு கிடைக்க கொஞ்சம் கொஞ்சமாக பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகி, இவ்வருடம் Sundance திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டு சிறந்த இயக்குனருக்கான விருதையும், நடுவர்களின் சிறப்பு விருதையும் பெற்றுக் கொண்டது. இப்போது லொகார்னோவின் போட்டிப் பிரிவில் போட்டியிட அழைக்கப்பட்டுள்ளது.

சென்  ஃபிரான்ஸிஸ்கோ என்றதும் எமக்கு ஞாபகம் வருவது அந்நகரின் பிரபலமான பாலம் மாத்திரமே. ஆனால்  இத்திரைப்படம், அந்நகரின் வாழ்ந்து கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயரத் தொடங்கியிருக்கும் அமெரிக்க ஆஃபிரிக்க கறுப்பினச் சமூகத்தினரைப் பற்றி அலசுகிறது. இதன் இயக்குனர்களில் ஒருவரான Jimmie Fails நிஜ வாழ்க்கைக் கதை இது. அவரே திரைப்படத்திலும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

பிரித்தானிய காலனித்துவத்தின் போது விக்டோரியா மகாராணியார் ஆட்சியின் கீழ் கட்டப்பட்ட ஒருவகையான கட்டிடக் கலை வீடுகள், Victorian House எனப்படும். சான்ஃபிரான்ஸிஸ்கோவில் உள்ள  அவ்வாறான வீடொன்று அபூர்வமானதாக அவரது தாத்தாவினால் கட்டப்பட்டது. இவர்கள் அனைவருமே கறுப்பு இனத்தவர்கள். அவ்வீடு தனது தாத்தாவினால் தான் கட்டப்பட்டது என எவரும் நம்பப்போவதில்லை. இப்போது அவர்கள் அந்த வீட்டிலும் இல்லை. ஆனால் அந்த வீட்டினை மீண்டும் தனக்கு உரிமையாக்க போராடுகிறான் Jimmie.

தூய்மைப் புரட்சி என பழயனவற்றை எல்லாம் கழிக்கும் மாற்றுத் திட்டத்தின் கீழ் சான் ஃபிரான்ஸிஸ்கோ எவ்வளவு வேகமாக மாற்றமடைந்து வருகிறது. அதில் எந்தளவு கறுப்பினத்தவர்கள் அடிபட்டிப்போகின்றனர் என்பதனையே படம் சித்தரிக்கிறது. படத்தின் ஒரு கட்டத்தில், Jimmie Fails இன் தாத்தா தான் இவ்வீட்டைக் கட்டினாரா என்பதையே சந்தேகமாக்குகிறது திரைப்படம். இன்னமும் கறுப்பினத்தவர் மீது காட்டும் பாரபட்சம், எதையும் தாம் நினைத்தபடி செய்து முடிக்க முடியாத நிதிப்பற்றாக்குறை, வறுமை, அவற்றின் நடுவே கூட ஒருவரை ஒருவரை விட்டுக் கொடுக்காத நட்பு என பலவற்றை அழகாக எடுத்துக் காண்பிக்கிறது இத்திரைப்படம்.

- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியலாளர்கள்

The last black man in San Fransisco : featured in Locarno

A film titled 'The Last Black Man in San Fransisco' Competing in this year's Locarno's International film contest, directed by Joe Talbod and Jimmie Fails is an important American alternative and independent  cinema movie. This film was the first long feature film for both directors. They were shot few scenes from the movie and shown them and asked financial help to shoot entire movie in a crowd funding site of 'KickStarter.'  They received support more than they expected and this movie was produced finally with an adequate budget. It was already screened in 'Sundance' film festival and won award for best director and special jury prize.

Now it was selected to compete in Locarno's International film contest is also a subject of pride for its makers. The golden gateway bridge of San Fransisco might always come to our attention when we hear the name of the city. But this film is analyzing about the life and decreasing migration of the first generation of  American African people who lives there. Its story is based on true events of Jimmie Fails life who has also played the main character of the film.

The many Victorian Houses built very long ago in San Fransisco under British Colony when queen Victoria ruled British empire. One of the most rare and old victorian house in San Fransisco was built by Jimmie Fails's Grandpa. Jimmie, his grandpa and his relatives all of them were black people and no body is going to believe that this house was built by them. None of these black people neither living in that victorian house too.

The story of this film was about how Jimmie is battling to retake this house as it is her rights to do too. This film also potraying how San Fransisco is changing rapidly by the revolution of purification, and how the black men were being beaten because of it.

Today, the city is home to a diverse cross-section of American people, many of whom are being forced to move elsewhere due to one of the worst housing crises in the country. The audience questioning , «is it really the  grandpa of Jimmie built this famous victoria house?» in once stage of the movie while watching.

The film is also describing beautifully, the discrimination black people still receive in the city at present, The lack of fund to do what ever they wish and their poverty and in the middle the deep friendship among them that won't give up each other.

- 4tamilmedia reporters from Locarno / Translation Navan

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.