திரைச்செய்திகள்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பங்கேற்பாளர் முகேன்.

அவர் கதநாயகனாக அறிமுகமாகும் படம் ‘வேலன்’. இவருக்கு ஜோடியாக மீனாட்சி நடிக்கிறார். காதல் கதையான இது பொள்ளாட்சியில் நடக்கிறது. இவர்களுக்கு அடுத்த நிலையில் மூன்றாவது பெரிய கதாபாத்திரம் பிரபு ஏற்றிருப்பது. ‘தலைவர் பழனிச்சாமி’ என்ற வேடம் ஏற்றுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியை நினைவூட்டும்விதமாக இந்த வேடத்தை அமைத்துள்ளாராம். தற்போது திமுக ஆட்சி நடந்துவரும் வேளையில் எடப்பாடி பழனிச்சாமியை கௌரவிக்கும் விதமாக இந்த வேடத்தை அறிமுகப்படுத்தியிருப்பதுடன் இந்தப் படத்தை தயாரிப்பவர் பொள்ளாட்சியில் குடியிருக்கும் சிவாஜியின் தம்பி சண்முகத்தின் மகனுடைய பினாமிகள் என்று தெரிகிறது.

மேலும் இந்தப்படத்தில் பிரபுவின் தோற்றத்தை தைரியமாக இன்று வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை 30 நாட்கள் பொள்ளாச்சி பகுதிகளில் நடத்தியிருக்கிறார்கள் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சேலத்தின் எடப்பாடியில் தற்போது நடத்தி வருகிறார்களாம். பிரபு தவிர, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் கவின் எழுதி இயக்க, பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.